இன்றைய வேதவசனம் 27.01.2023: உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்
ஒரு முறை ஒரு தொழிலதிபருக்கு பாரட்டு விழா நடத்தபட்டது. அப்போது நடைபெற்ற விருந்துக்கு பின் அங்கிருந்தவர்கள், அந்த தொழிலதிபரை பார்த்து, 23ஆம் சங்கீதத்தை வாசிக்கும்படி கூறினார்.
அந்த தொழிலதிபார், தான் அந்தச் சங்கீதத்தை வாசித்த பின் உங்களில் ஒருவரும் கட்டாயம் வாசிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பெயரில் வாசிக்க ஒப்புக்கொண்டார்.
அந்த தொழிலதிபர் சங்கீதத்தை வாசிக்கும் போது, அங்கு கூடியிருந்த அனைவரும் மிகவும் அமைதியாகக் கவனித்தனர்.
இவர் முடித்த பின்பு, கிறிஸ்தவ விசுவாசி ஒருவர் வாசித்தார். அவர் வாசித்து முடித்தபோது கண்ணிர் வராத கண்களே அக்கூட்டத்தில் இல்லை!
சிறிது நேர அமைதிக்கு பின், அந்த தொழிலதிபர், " நான் உங்கள் காதுகள் கேட்க்க வாசித்தேன்.
இந்த விசுவாசியோ உங்கள் இருதயத்தை தொடும்படி வாசித்தார். இந்த சங்கீதத்தை நான் அறிவேன். ஆனால் இந்தப் விசுவாசியோ, இச்சங்கீதத்தில் சொல்லபட்டுள்ள மேய்ப்பரைாயே அறிவார்" என்று கூறினார்.
இந்த தொழிலதிபர் போன்று பலர் வேதாகமம் ஒரு நல்ல அறிவுரைகள் அடங்கிய இலக்கியம் என்று தான் அறிகின்றனர்.
ஆனால் வெகு சிலர் தான் வேதாகமம் தேவனால் வெளிப்படுத்தபட்ட அருமையான, உயிருள்ள வார்த்தைகள் அடங்கிய புத்தகம் என்பதை அனுபவித்துள்ளனர்.
நாமும் இந்த உயிருள்ள வேத புத்தகத்தை வாசித்து ஒவ்வொரு நாளும் தேவ பிரசன்னத்தை உணர்வோமாக... ஆமென்!! அல்லேலூயா!!!
உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன். (#சங்கீதம் 119:92)