தடுப்பூசி இல்லை: இலங்கையில் வேகமாக பரவவுள்ள கொடிய ஆபத்து

#SriLanka #sri lanka tamil news #Health #Vaccine
Mayoorikka
1 year ago
தடுப்பூசி  இல்லை: இலங்கையில் வேகமாக பரவவுள்ள கொடிய ஆபத்து

இலங்கையில் வெறி நாய் கடி தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் வெறிநாய்க்கடி வேகமாக பரவும் அபாயம் காணப்படுவதாகவும்  பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அதன் தலைவர் உபுல் ரோஹன, இலங்கையில் வெறிநாய்க்கடியை ஒழிக்க ஒரு வெற்றிகரமான தடுப்பூசி செயல்முறை வழிவகுத்தது.

ஆனால் துரதிஷ்டவசமாக தடுப்பூசி திட்டம் முற்றாக நிறுத்தப்பட்டதால் இந்த ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

“கடந்த காலங்களில், இலங்கையில் வெறிநாய்க்கடியால் ஏற்படும் இறப்புகள் குறைவதற்கு, அடிமட்ட அளவில் வெற்றிகரமான தடுப்பூசி திட்டம் இருந்ததே முக்கிய காரணம். 
துரதிஷ்டவசமாக, தடுப்பூசி திட்டம் முற்றாக முடங்கியுள்ளது. தற்போது வெறிநாய் தடுப்பூசிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

தொடர்ந்து தடுப்பூசிகள் வழங்கப்படாததால், இத்திட்டம் வெற்றிகரமாக இயங்கவில்லை. குறிப்பாக நாய்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு வருடத்திற்கு ஒரு முறையாவது தடுப்பூசி போட வேண்டும். இந்த திட்டம் வெற்றிகரமாக இயங்கவில்லை. கடந்த சில மாதங்களாக, கொவிட் 19 காலத்தில், கிட்டத்தட்ட 5 மாதங்கள் இந்தத் திட்டம் செயலற்ற நிலையில் உள்ளது.

அத்துடன் எரிபொருள் பிரச்சினை காரணமாக கடந்த ஒரு மாதமாக இத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடந்த டிசம்பரில் இருந்து, கொவிட் 19 மற்றும் எரிபொருள் பிரச்சினை மற்றும் தடுப்பூசிகளின் பற்றாக்குறை காரணமாக இந்த திட்டம் தோல்வியடைந்தது. 

எனவே, எதிர்காலத்தில் வெறிநாய்க்கடி நோயால் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. நாய்க்கடியை முடிந்தவரை தவிர்க்குமாறு பொதுமக்களை எச்சரிக்கிறோம். மேலும், சந்தேகத்திற்கிடமான நாய் கடி ஏற்பட்டால், அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரை அணுகவும்..”

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!