அரிசி தொடர்பில் விவசாய திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்!

#SriLanka #Food
Mayoorikka
1 year ago
அரிசி தொடர்பில் விவசாய திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்!

நாட்டில் இந்த வருடம் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என  விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. 

எவ்வாறாயினும், நெற்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக பல்வேறு பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 

அண்மைய நாட்களாக நாட்டின் ஒரு சில பாகங்களில் உள்ள வயல் நிலங்களில் நெற்கதிர்கள் மஞ்சல் நிறத்தில் இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். நெற்கதிர்களில் ஏற்படும் பொற்றாசியம் பற்றாக்குறையே இதற்கு காரணம் என விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான நோய் நிலமைகளில் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்கு, உரிய முறையில் சரியான நேரத்தில் உரமிடப்படுவது கட்டாயமாகும். எனினும், உரம் கிடைப்பதில் ஒரு சில இடங்களில் தாமதம் நிலவுவதால், இவ்வாறான நோய் நிலமைகள் எற்படுவதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை நாட்டில் தற்பொழுது பெய்த கடும் மழையின் காரணமாக வட பகுதி உட்பட பல பிரதேசங்களில் நெல் அறுவடை செய்யாமல் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!