துருக்கி நிலநடுக்கம்: கலங்கவைக்கும் புகைப்படங்கள் வெளியீடு

#world_news #Earthquake #Death #Lanka4 #sri lanka tamil news #Tamilnews
Mayoorikka
1 year ago
துருக்கி நிலநடுக்கம்: கலங்கவைக்கும்  புகைப்படங்கள் வெளியீடு

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில்   3,700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Turkey3

7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.

Turkey3

சிரியா எல்லையை ஒட்டிய தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் முதலில் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

Turkey4

சிரியாவில், அலெப்போ, ஹமா, லதாகியா ஆகிய பகுதிகளில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

துருக்கி மற்றும் சிரியாவுக்கு தங்களால் முடிந்த உதவியைச் செய்வதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சூனக் தெரிவித்துள்ளார்.

Turkey5

1999ஆம் ஆண்டில், துருக்கியின் வடமேற்கில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 17,000க்கும் அதிகமானோர் பலியாகினர்.

Turkey6

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் கடுமையான குளிர் நிலவுதால் மீட்புப் பணிகள் கடினமாக இருக்கின்றன. மீட்கப்பட்டவர்களும் குளிருடன் போராட வேண்டியிருக்கிறது.

Turkey7
Turkey1

இது துருக்கியின் வரலாற்றில் மிகப்பெரிய நிலநடுக்கமாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன.

Turkey2

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!