சற்றுமுன் கிடைத்த தகவலின்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை கடந்தது

#Death #Earthquake #Lanka4 #world_news #Tamilnews #Tamil #people #today
Prabha Praneetha
1 year ago
 சற்றுமுன் கிடைத்த  தகவலின்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை கடந்தது

தென்கிழக்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியா முழுவதும் தாக்கிய பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் திங்கள் கிழமை அதிகாலை 4:17 மணியளவில் துருக்கியின் காசியன்டெப் நகரில் 7.8 ரிக்டர் அளவில், 17.9 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பான யு.எஸ். ஜியாலஜிக்கல் சர்வே தெரிவித்துள்ளது.

துருக்கியில் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் மிக மோசமான நிலநடுக்கம் இது என நிலநடுக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது வரை துருக்கியில் குறைந்தது 2,291 பேர் இந்த நிலநடுக்கத்தால் பலியாகியுள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வு சுமார் 2 நிமிடங்கள் நீடித்ததாக, அதில் உயிர் பிழைத்தவர்கள் கூறியுள்ளனர்.

துருக்கியின் காரமன்மராஸ் மாகாணத்தில் உள்ள எல்பிஸ்டான் மாவட்டத்தில் திங்கள்கிழமை 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் பதிவானது.

நிலநடுக்கத்தால் யாரேனும் உயிர் பிழைத்துள்ளனரா என இடிபாடுகளுக்கிடையே தங்களின் வெறும் கைகளால் தோண்டி மீட்புப்பணியில் மீட்புக்குழுவினர் சிலர் ஈடுபட்டனர்.

turky

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,419ஆக உயர்ந்துள்ளதாக துருக்கி துணை ஜனாதிபதி ஃபுவாட் ஒக்டே தெரிவித்தார்.

மேலும், 20,426 பேர் காயமடைந்துள்ளதாகவும் 5,700 க்கும் மேற்பட்ட கட்டடங்கள் அழிந்துள்ளதாகவும் துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!