இன்றைய வேத வசனம் 10.02.2023: தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்

#Bible
Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 10.02.2023: தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்

திருச்சபையில் விதவைகள், ஏழைகளை பராமரிக்கும் பணியில் ஏழுபேர் உதவியாளர்களாக (Deacons) ஏற்படுத்தப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் விசுவாசமும், பரிசுத்த ஆவியும் நிறைந்த அனுபவமுடைய ஸ்தேவான்.
ஸ்தேவான் என்ற பெயருக்கு 'கிரீடம்' (Crown) என்பது பொருள். அவர் நியாயப்பிரமாணத்தை நன்கு கற்றறிந்தவராகவும், பேச்சில் வல்லவராகவும், நற்செய்தியைக் கூறும் திறமை பெற்றவராகவும் இருந்தார். 

உயிர்த்தெழுந்த இயேசுவைக் குறித்து தைரியமாய் பேசுகிறவராக காணப்பட்டபடியாலும் மக்கள் நடுவில் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தபடியாலும் யூதர்கள் அவரோடு விவாதம் செய்தனர்.
ஆனால் அவர்களால் எதிர் பேச முடியாமல் போனது (#அப்போஸ்தலர் 6:8-10) எனவே ஆலோசனை சங்கத்தில் விசாரணைக்காக நிறுத்தப்பட்ட போது "அவர் முகம் தேவதூதன் முகம் போலிருக்க கண்டார்கள்" (#அப்போஸ்தலர் 6:15).

பிரதான ஆசாரியனுக்கு முன் அவருடைய பேச்சும், இஸ்ரவேலின் ஆரம்பகால சரித்திரம் முதல் இயேசு கிறிஸ்து வரைக்கும் உள்ள நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கூறுகிறதைக் கேட்டு அங்குள்ள யூதர் மூர்க்கமடைந்து கல்லெறிந்து கொல்லும்படியான மரண தண்டனை நிறைவேற்றுகின்றனர்.

அப்போஸ்தலர் 7:38,39-ன்படி "அவரை நகரத்துக்கும் புறம்பே தள்ளி கல்லெறிந்தார்கள் சாட்சிக்காரர் தங்கள் வஸ்திரங்களைக்கழற்றி சவுல் எனப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தினருகே வைத்தார்கள்.
அப்போது ஸ்தேவான் கல்லெறியப் படுகையில் "கர்த்தராகிய இயேசுவே என் ஆவியை ஏற்றுக் கொள்ளும்" என்ற இறை வேண்டுதல் செய்தார்.

மேலும் “ஆண்டவரே இவர்கள் மேல் இந்த பாவத்தைச் சுமத்தாதிரும்” என்ற வேண்டுதலும் "இதோ வானங்கள் திறந்திருக்கிறதையும் மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன்" என்ற அவரின் உறுதியான சாட்சியும் (#அப்போஸ்தலர் 7:55-60), அருகாமையில் நின்ற யூதர்களை கலங்கடிக்கச் செய்தன.

குறிப்பாக அந்த நிகழ்ச்சியே சவுல் என்ற பவுலின் மனமாற்றத்திற்கு அடிப்படைக்காரணமாக அமைந்தது எனலாம்.

இவரது மரணமே திருச்சபையின் முதல் இரத்தசாட்சி மரணமாகும்.
தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான். (மாற்கு 8:35).

ஆமென்!! அல்லேலூயா!!!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!