இன்றைய வேதவசனம் 11.02.2023: துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு
தேவனாகிய கர்த்தர் நம்மோடுகூட இருக்கும் போது நாம் கவலையோடு இருக்க வேண்டிய அவசியமில்லை.
இயேசு நம்மோடு இருக்கும் பொழுது அவர் நமக்கு ஆறுதலை சந்தோஷத்தை கொடுக்கிறார்.
#சங்கீதம் 94:19ல் பார்க்கிறபடி "என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில் உம்முடைய ஆறுதல்கள் என்னை தேற்றுகிறது"
ஒரு தாய் தன் பிள்ளையை தேற்றுகிறது போல கர்த்தர் நம்மை தேற்றுகிறவராக இருக்கிறார்.
சில வேளைகளில் மனிதர்களால் நம்முடைய துயரங்களையும், நம்முடைய பிரச்சனைகளையும் புரிந்துகொள்ள முடியாது.
சில நேரங்களில் நீங்கள் யாருக்கும் தெரியாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கலாம், இந்த கண்ணீரை தேவன் பார்த்து உங்களை நிச்சயமாக ஆறுதல் படுத்துவார்.
நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; (#ஏசாயா 51:12)
அதே வேளையில் கீழ்கொடுக்கப்பட்டுள்ள தேவ வார்த்தையையும் நினைவு கூற அழைக்கப்பட்டிருக்கிறோம்.
துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; (#சங்கீதம் 32:10)