இன்றைய வேத வசனம் 13.02.2023: கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்

#Bible
Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 13.02.2023: கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்

எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. (#I_தெசலோனிக்கேயர் 5:18)
எல்லாவற்றிலேயும்... எப்பொழுதும்.. ஸ்தோத்திரம் செய்ய முடியுமா? என்கிற கேள்வி உங்கள் உள்ளத்தில் தோன்றலாம்!!

ஆம், முடியும். கர்த்தர் மேல் அன்பும் விசுவாசமும் இருக்கும்போது, எந்த சூழ்நிலையானாலும், கர்த்தரைத் துதிக்க முடியும். கர்த்தரைத் துதிக்கும் போது உங்கள் உள்ளத்திலிருந்து பாரம் இறங்கிப் போகும்.
கர்த்தரைத் துதிக்கும் போது உங்கள் பகைவர்களை உங்களால் மனப்பூர்வமாக மன்னிக்க முடியும்!!

கர்த்தரில் மகிழ்ந்து களிகூர முடியும்! கர்த்தரை இன்னும் அதிகமாய் சார்ந்து ஜீவிக்க முடியும்!
கர்த்தரை அதிகமாய் துதிக்கிற ஒரு சகோதரிக்கு பல வருடங்களாய் குழந்தையில்லை. தாய்மை அடைய வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு ஏக்கமாய் மாறிப்போனது.

பல வருடங்கள் கழித்து கர்ப்பம் தரித்தபோது, அவர்கள் இருதயம் சந்தோஷத்தில் நிறைந்தது. ஆனால், திடீரென்று வயிற்றில் வலி ஏற்பட்டு கரு சிதைவாகிபோனது.

அந்த நேரத்திலும் அவர்கள் வாயிலிருந்த துதி மாறவில்லை. கர்த்தரில் அன்புகூறுகிறவர்களுக்கு அவர் சகலமும் நன்மைக்கேதுவாகவே செய்தருளுவார் (#ரோமர் 8:28) என்பதே அவர்கள் விசுவாசம்!
சில மாதங்களில் அவர்கள் வீடு முழுவதும் ஐந்து சிறுவர் சிறுமியர்களால் நிரம்பியிருந்தது. மகிழ்ச்சியும் துதியும் இன்னும் அதிகமாய் பொங்கி வழிந்தது.

ஐந்து அனாதை சிறுவர் சிறுமிகளை நேசித்து அவர்களை தத்தெடுத்து சொந்தப் பிள்ளையை போல் வளர்க்க ஆரம்பித்தார்கள், அந்த அனாதை பிள்ளைகள் வாழ்க்கையில் ஒளியேற்றும்படி கர்த்தர் அந்த சகோதரியை வழிநடத்தினார்.

என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி என்று மகிழ்ந்து துதித்தார்கள். ஆமென்!! அல்லேலுயா!!!

#சங்கீதம் 34:1
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.