நாய்களுக்கு திருமணம் செய்து வைத்து காதலர் தினத்திற்கு எதிர்ப்பு..!

#Marriage #valentine #Tamilnews #Tamil Nadu
Mani
1 year ago
நாய்களுக்கு திருமணம் செய்து வைத்து காதலர் தினத்திற்கு எதிர்ப்பு..!

காரைக்குடி
இந்து முன்னணியினர்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாய்களுக்கு திருமணம் செய்துவைத்தனர்.
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள இந்து முன்னணி அலுவல வாசலில் இரண்டு நாய்களுக்கு திருமணம் செய்து இந்து சமய அறநிலையத்துறையினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
அதேநேரம் தாங்கள் காதலுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும், பொது இடங்களில் காதலர்கள் அநாகரீகமாக நடந்து கொள்வதாகவும், அவர்களை கண்டிக்கும் வகையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.