இன்றைய வேத வசனம் 17.02.2023: நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்

#Bible
Prathees
1 year ago
இன்றைய வேத வசனம் 17.02.2023: நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்

நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது. ஏசாயா 64:6.

சமீபத்தில், விருந்தினர் வருவதற்கு முன்பு நானும் என் மனைவியும் எங்கள் வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்தோம். எங்கள் சமையலறையின் வெள்ளை தரையில் சில கருப்பு கறைகளை நான் கவனித்தேன். அதை முழங்கால் ஊன்றி  தேய்க்க வேண்டியிருந்தது. 

ஆனால் எனக்கு விரைவில் ஒன்று தோன்றியது: நான் எவ்வளவு அதிகமாகத் துடைத்தாலும், மற்ற கறைகளை நான் கவனித்தேன். நான் நீக்கிய ஒவ்வொரு கறையும் மற்றதை மிகவும் தெளிவாக்கியது. திடீரென்று எங்கள் சமையலறையின் தளத்தைச் சுத்தமாக்குவது இயலாமல்போனது. நான் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், என்னால் இந்த தரையை முழுமையாகச் சுத்தம் செய்ய முடியாது என்று ஒவ்வொரு முறையும் நான் உணர்ந்தேன்.

சுய சுத்திகரிப்பு பற்றி வேதம் கூறுகிறது. பாவத்தை நாம் சொந்தமாகக் கையாள்வதில் நாம் எடுக்கும் சிறந்த முயற்சிகள் எப்போதும் தோல்வியடையும் . தேவனுடைய ஜனங்களாகிய இஸ்ரவேலர்கள், அவருடைய இரட்சிப்பை அனுபவிக்கக் கூடாமல் இருப்பதால் (ஏசாயா 64:5) விரக்தியடைந்த ஏசாயா தீர்க்கதரிசி, “நாம் எல்லாரும் அசுத்தமானவர்களைப் போல் ஆனோம், எங்களுடைய நீதியான செயல்களெல்லாம் அழுக்கான துணியைப் போலிருக்கிறது”(வ. 6) என்றெழுதினார்.

ஆனால் தேவனின் கருணையின்  மூலம் எப்போதும் நம்பிக்கை இருப்பதை ஏசாயா அறிந்திருந்தார். ஆகையால், “நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர்” (வ. 8) என்று கெஞ்சினார். ஆழமான கறைகள் “உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்” வரை நம்மால் முடியாததைத் தேவன் ஒருவரே சுத்தம் செய்ய முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார் (1:18).

நம் ஆத்துமாக்களில் படிந்திருக்கும் பாவத்தின் கறைகளையும், அழுக்கையும் நாம் துடைக்க முடியாது. அதிர்ஷ்டவசமாக, நம்மை முழுமையாகச் சுத்திகரிக்கும் பலியாக மாறின அவரில் நாம் இரட்சிப்பைப் பெறலாம் (1 யோவான் 1:7).

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!