காரசாரமான சுவை கொண்ட ஆட்டு ஈரல் ரோஸ்ட்; செய்வது எப்படி

#Recipe #Preparation
Mani
1 year ago
காரசாரமான சுவை கொண்ட ஆட்டு ஈரல் ரோஸ்ட்; செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

2 ஈரல்
4 வெங்காயம்
2 தக்காளி
1 குடை மிளகாய்
1 tbsp இஞ்சி பூண்டு விழுது
3 பச்சை மிளகாய்
¼ tsp கரம் மசாலா
¼ tsp மஞ்சள் தூள்
1 tbsp மசாலா
¼ தூள்
1 tbsp மிளகு தூள்
3 tbsp எண்ணெய்
¼ tsp சோம்பு
2 பட்டை
1 லவங்கம்
4 ஏலக்காய்

செய்முறை:

ஆட்டு ஈரல் ரோஸ்ட் செய்ய முதலில் வெங்காயத்தையும், தக்காளி, பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். ஈரலை நன்கு கழுவி துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்

வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய், கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.

வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும். பிறகு ஈரலை சேர்த்து உப்பு, மஞ்சள், மிளகு, மிளகாய் தூளைச் சேர்த்து கிளறி மூடி விடவும்.

ஆவியிலேயே ஈரல் நன்கு வெந்து விடும். பரிமாறும் போது பெரிய துண்டுகளாக வெட்டிய வெங்காயம், குடை மிளகாயை சேர்த்து பரிமாறவும். சுவையான ஆட்டு ஈரல் ரோஸ்ட் பரிமாறவும்.சுவையான ஆட்டு ஈரல் ரோஸ்ட் தயார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!