இன்றைய வேத வசனம் 27.02.2023: என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்
என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன். சங்கீதம் 61:2
எழுத்தாளரும் இறையியலாளருமான ரஸ்ஸல் மூர், தம் பிள்ளைகளைத் தத்தெடுத்த ரஷ்ய அனாதை இல்லத்தில் உள்ள அமானுஷ்ய அமைதியை விவரித்தார். குழந்தைகள் தங்களின் அழுகைக்கு யாரும் பதிலளிக்க மாட்டார்கள் என்பதை அறிந்ததால், அவர்கள் தங்களின் அழுகையை நிறுத்திவிட்டதாக ஒருவர் பின்னர் விளக்கினார்.
கடினமான நேரங்களில், கேட்பாரற்றவர்களாக நாமும் உணரலாம். அதிலும் மோசமானது, தேவனும் நம் அழுகையைக் கேட்கவில்லை அல்லது நம் கண்ணீரைப் பார்க்கவில்லை என்ற உணர்வுதான். ஆனால் அவர் பார்க்கிறார், கேட்கிறார்!
அதனால்தான் நமது அந்த உணர்வை எதிர்க்கும் குறிப்பாகச் சங்கீத புத்தகத்தில் காணப்படும் விண்ணப்பம் நமக்குத் தேவை. சங்கீதக்காரர்கள் தேவனின் உதவிக்காக மன்றாடுகிறார்கள், மேலும் தங்கள் சூழ்நிலைகளை எதிர்க்கிறார்கள்.
சங்கீதம் 61 இல், தாவீது தன் விண்ணப்பங்களையும் எதிர்ப்பையும் தனது சிருஷ்டிகரிடம் கொண்டுவந்து, “என் இருதயம் தொய்யும்போது.. உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்” (வ. 2) என்கிறார். தாவீது தேவனிடம் கூக்குரலிடுகிறார், ஏனென்றால் அவர்தான் தனது “அடைக்கலம்” மற்றும் “துருகம்” (வச. 3) என்பதையறிந்திருந்தார்.
சங்கீதங்களின் இவ்விண்ணப்பங்களை மற்றும் எதிர்ப்புகளை ஜெபிப்பது தேவனின் சர்வ ஆளுகையை நமக்கு உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், அவருடைய நன்மை மற்றும் உண்மையை நம்பி முறையிடுவதற்கும் ஒரு வழியாகும்.
தேவனுடனான நமது நெருங்கிய உறவின் ஆதாரம் அவை. கடினமான தருணங்களில், அவர் கவலைப்படுவதில்லை என்ற பொய்யை நம்ப நாம் சோதிக்கப்படலாம். ஆனால் அவர் காண்கிறார். அவர் நமக்குச் செவிசாய்த்து நம்மோடிருக்கிறார்.