இன்றைய வேதவசனம் 04.03.2023: உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய்
மனிதனை பிரியப்படுத்த ஊழியம் செய்பவன் மண்னையே கவ்வுவான்! அவன் வெற்றிக்கொள்வதே இல்லை!
சோகத்தில் மூழ்கிபோவன், அவன் சந்தோஷத்தை காண்பதே இல்லை! இருப்பதையெல்லாம் இழந்து போவான்! எதுவும் அவன் பெறப்போவதே இல்லை!
இறுதியில் தேவன் அந்த பொல்லாத ஊழியனை புறம்பான இருளில் தள்ளிவிடுவார். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குகம்.
ஆனால், நீயோ மனிதனை பிரியப்படுத்த ஊழியம் செய்யாமல் இயேசுவை பிரியப்படுத்த ஊழியம் செய்து,
தேவ ஆவியானவரின் சத்தத்திற்க்கும் தேவ வசனங்களின் சத்தத்திற்க்கும் கீழ்ப்படிவாயானால்,
உன் தூக்கம் இன்பமாக இருக்கும்! துக்கம் உன் தொண்டையை அடைக்காது! துன்பம் உன்னை அணுகாது! தனிமை உன்னை துரத்தாது!
நீ பகலிலும், இரவிலும் மகிழ்வாய்! செய்வதெல்லாவற்றிலும் நிறைவு காண்பாய்! உன் மூலம் அநேகரின் தேவைகள் சந்திக்கப்படும்! அநேக ஆத்துமாக்கள் இயேசுவை அறியும்!
ஒர் நாள் உன் காதில் கேட்பது!!!
"நல்லது உத்தமமும் உண்மையுள்ள ஊழியனே உன் எஜமானின் சந்தோஷத்தில் பிரவேசி"
காரணம் நீ எஜமானின் கட்டளைகளை நிறைவேற்றியவன்..!
ஆமென்!! அல்லேலூயா!!!
மத்தேயு 25:21
நல்லது, உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.