இன்றைய வேத வசனம் 08.03.2023: தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்
கடைசி நாட்களில் தேவபக்தியின வேஷம் தரித்த மனிதர்கள் எழும்புவார்கள் என வேத வசனம் தெளிவாகக் கூறுகிறது.
யாரேனும் ஒருவர் அவரது ஆவிக்குரிய அனுபவங்களைக் குறித்து அடிக்கடி பேசினால் அவரைக் குறித்து எச்சரிக்கை!
யாரேனும் ஒருவர் நீங்கள் தனியாக இருக்கும் போது அடிக்கடி உங்களை சந்தித்தால் அவரைக்குறித்து எச்சரிக்கை!
எவரேனும் உங்களை தனியாக சந்திக்க கேட்டுக்கொண்டாள் அவரைக்குறித்து எச்சரிக்கை!
எவரேனும் ஒருவர் உங்களிடம் அளவுக்கு மீறி ஆர்வம் காட்டினால் எச்சரிக்கை!
நீங்கள் தேவவசன அறிவில் ஆழமாயிராவிடில் எவரேனும் ஒருவரால் ஏமாற்றப்பட சாத்தியக்கூறு அதிகம்.
ஒரு நபர் அல்லது ஊழியத்தைக் கனியினால் எளிதில் அறிந்துக்கொள்ளலாம் என தேவவசனம் கூறுகிறது.
ஒரு தேவ ஊழியன் அல்லது ஊழியத்தில் ஆவியின் கனியாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம் மற்றும் இச்சையடக்கம் காணப்பட வேண்டும்!
சுயநலம், பணம், பெருமை, அகங்காரம், அவதுறு, இச்சை முதலியவை செயல்படுவதை நீங்கள் உணர்ந்தால் அத்தகய நபரைவிட்டு விலகியிருங்கள். நாம் இறுதி நாட்களில் வாழ்கிறோம்!!
#II_தீமோத்தேயு 3:5
தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.
ஆமென்!! அல்லேலூயா!!!