பாகிஸ்தானில், இந்து மதத்தைச் சேர்ந்த மருத்துவர் சுட்டுக்கொலை
#world_news
#Breakingnews
#ImportantNews
#Tamilnews
Mani
2 years ago
கராச்சி
பாகிஸ்தான் கராச்சி மாநகராட்சி முன்னாள் இயக்குனராக இருந்தவர் டாக்டர் பீர்பால் ஜெனனி. சிறந்த கண் டாக்டரான இவர் கராச்சியில் கிளினிக் வைத்து நடத்தி வந்தார். நேற்று இரவு இவர் காரில் கிளினிக்கில் இருந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். அவருடன் கிளினிக்கில் பணியாற்றி வரும் பெண் டாக்டர் ஒருவரும் சென்றார். கராச்சி லாயர் எக்ஸ்பிரஸ் சாலையில் கார் சென்று கொண்டு இருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரது காரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் நிலை தடுமாறிய கார் அருகில் இருந்த சுவர் மீது மோதி நின்றது. இந்த துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்த டாக்டர் பீர்பால் ஜெனனி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் காரில் பயணம் செய்த பெண் டாக்டர் உடலிலும் குண்டு பாய்ந்தது. இதில் அவர் ரத்தவெள்ளத்தில் காரில் உயிருக்கு போராடினார்.