தமிழ் சினிமாவின் பிரபல கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்
#Death
#TamilCinema
#Women
#Movie
#Singer
Prasu
1 hour ago
மறைந்த கிராமிய பாடகி பரவை முனியம்மாவின் நெருங்கிய தோழியான விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியை சேர்ந்த லட்சுமி அம்மாள் 75வது வயதில் காலமானார்.
கோவில் திருவிழா மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளில் தனது கணீர் குரலால் கிராமிய இசையில் தமிழ் மணக்க பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் லட்சுமி அம்மாள்.
2007ம் ஆண்டு இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான 'பருத்தி வீரன்' படத்தில் "ஊரோரம் புளியமரம்" பாடல் பாடி லட்சுமி அம்மாள் நடித்தார். இதனால் பிரபலம் அடைந்த லட்சுமி அம்மாள் மேலும் பல்வேறு கிராமங்களுக்கு சென்று பாடி வந்தார்.
கடந்த 2 நாட்களாக லட்சுமி அம்மாளின் உடல்நிலை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை அவர் தனது வீட்டிலேயே மரணம் அடைந்தார்.
(வீடியோ இங்கே )