கவர்ச்சி பத்திரிகையின் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்த பிரான்ஸ் பெண் மந்திரி
#France
#Minister
#Women
#magazine
#Photo
#world_news
#Tamilnews
#Lanka4
Prasu
2 years ago
பிரான்சில் அதிபர் மேக்ரான் தலைமையிலான அரசில் சமூகப் பொருளாதாரம் மற்றும் சங்கங்களுக்கான மந்திரியாக இருந்து வருபவர் மர்லின் சியாப்பா. பெண்ணியவாதியும், எழுத்தாளருமான இவர் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் ஆவார்.
அந்த வகையில் தற்போது அவர் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். அமெரிக்காவில் வெளியாகும் பிரபல ஆபாச பத்திரிகையான பிளேபாய் பத்திரிகைக்கு பேட்டி அளித்ததோடு மட்டுமல்லாமல் அதன் அட்டை படத்துக்கும் 'போஸ்' கொடுத்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வயது வந்தோருக்கான பத்திரிகைக்கு பெண்கள் மற்றும் ஓரின சேர்க்கை உரிமைகள் மற்றும் கருக்கலைப்பு குறித்து 12 பக்கங்களுக்கு பேட்டி அளித்துள்ளார் மர்லின் சியாப்பா.
மேலும் அவரின் சம்மதத்தோடு அவரின் புகைப்படத்தை அட்டை படத்தில் போட்டுள்ளது பிளேபாய் பத்திரிகை.