முன்னோர் சொல் வாக்கு செல்வாக்கற்று போகுமோ? எத்தனை பெரிய எண்ணங்கள் நமக்கு. எதற்கு இவையெலாம்? -நதுநசி. இன்றைய கவிதை 07-04-2023.

#கவிதை #முன்னோர் #இன்று #தகவல் #லங்கா4 #Poems #Elder #today #information #Lanka4
முன்னோர் சொல் வாக்கு செல்வாக்கற்று போகுமோ? எத்தனை பெரிய எண்ணங்கள் நமக்கு. எதற்கு இவையெலாம்? -நதுநசி. இன்றைய கவிதை 07-04-2023.

முன்னோர் சொல் வாக்கு
செல்வாக்கற்று போகுமோ?
+++++++++++++++++++++++++++++

எத்தனை பெரிய
எண்ணங்கள் நமக்கு.
எதற்கு இவையெலாம்?
எண்ணிடத் தோன்றுது.

முன்னோர் சொன்ன
முதுமொழி கற்றேன்.
முன்னகர நடந்தேன்.
முகம் குப்பர விழுந்தேன்.

அடியாளாக வாழ்ந்திட
அரசனுக்கு ஒத்திசைந்திட
அச்சம் கொண்டு வாழ
அசராத துணிவு தந்தது.

கொஞ்சம் கூட அவை
கொடுந்துயர் தரும்
கொடூரம் எதிர்க்க
கொடுக்கை தரவில்லை.

முன் பின்னாக அவர்
முரண் சொன்னதைக் கூட
முதுமொழி கற்றலில்
முன்மொழிந்தது இல்லை.

முற்றும் கோணல் 
முழுதும் கோணல்.
முன்னே தடக்கினும்
முதிர்ச்சி அவை தராதே?

சுயமாக நடந்திடச் சொல்லி
சுற்றமும் கூட ஒரு வழி
சுதந்திரம் இங்கே தராதே!
சுவர் போல தடையிட்டு.

போட்டிக்கு பொறாமை
போக்கு இங்கே காட்டாது.
பொறுமை இருந்தும் பாரும்
பொறாமை தானே உந்தும்.

வெற்றி ஒன்றை நாம்
வென்றிட தந்திரம் இல்லை.
திரையிட்டுப் பேசும் போது
திக்கெட்டும் போர் வீரம்.

தேடிய என் தேடலில்
தேங்கிக் கிடந்திட தானே
தோல்வி தான் வெற்றியின்
முதற்படி என்றனர் நம்பிட.

வில்லெடுத்த போர்
வீரம் பேசிய போது
முன்னோர் எலாம் எனக்கு
மூதறிஞர் போலிருந்தனரே!

அன்று சொன்னவை
இன்று பொருந்தின்
என்றும் நலம் என தேடி
உன்று ஊன்றிய சிந்தை.

                                                                                             .........அன்புடன் நதுநசி