1200 கிலோ கொக்கைன் போதை பொருள் கடத்தல் - கடற்படை அதிகாரிகளால் சுற்றிவளைப்பு
#drugs
#Arrest
#Ship
#world_news
#Tamilnews
#Lanka4
#NavyOfficers
#Smuggling
Prasu
2 years ago
எல் சல்வடார் நாட்டில் லாகான்கார்டியா துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தில் போதை பொருள் கடத்தப்படுவதாக கடற்படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் கடற்படை அதிகாரிகள் துறைமுகத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது கடல் வழியாக பாதி அளவு மூழ்கக் கூடிய நீர் மூழ்கி போன்ற படகிலிருந்து 1200 கிலோ கொக்கின் என்ற போதைப் பொருளை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மதிப்பு ரூபாய் 30 மில்லியன் அமெரிக்க டாலர் இருக்கும் என கூறப்படுகின்றது.
இந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் படகில் இருந்த கொக்கைன் போதை பொருளையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.