இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் தொடர்பான முக்கிய தீர்மானம் இன்று!

#SriLanka #India #Egg #Food #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
3 years ago
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் தொடர்பான முக்கிய தீர்மானம் இன்று!

அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் சுகாதார சான்றிதழ் அறிக்கை இன்று (13) வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு மில்லியன் முட்டைகள் கொண்ட மற்றுமொரு கையிருப்பு அண்மையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதுடன், அவற்றை துறைமுகத்தில் இருந்து விடுவிப்பதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதி பெறப்படவிருந்தது.

குறித்த திணைக்களம் கடந்த சனிக்கிழமை குறித்த முட்டை கையிருப்பின் மாதிரிகளை எடுத்துக்கொண்டதுடன், நேற்று வரை அவை துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படுவதற்கான சுகாதார சான்றிதழ் வழங்கப்படவில்லை.

 கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஹேமாலி கொத்தலாவல, முட்டை இருப்புக்கான சுகாதார சான்றிதழ் இன்று வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட முட்டை தட்டுப்பாட்டுக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4