பெண்களின் கலாச்சாரத்தை அழிக்கும் நாகரீக மாற்றமும், முறையற்ற உறவுகளும்! இவைகளை தவிர்த்தால் மட்டுமே போதுமே !
தன் ஒழுக்கத்திலிருந்து தவறாமலும் கற்பு குறையாமல் வாழ்ந்தும் தன் கணவனையும் அன்புடன் நடத்தி இல்லறத்தைக் காப்பதில் சோர்வு அடையாதவளே பெண் என்று எடுத்துரைக்கிறார் வள்ளுவப்பெருந்தகை.
கணவனைத் தவிற வேறு ஆண்களிடம் தொலைபேசியில் பேசினால் குறைந்த பட்சம் பத்து நிமிடங்களுக்கு மேல் பேசக்கூடாது....!
அப்பா அண்ணன் தம்பி கணவனைத் தவிற மற்றவர்களிடம் என்ன சாப்பிட்டேன், எப்போது தூங்கினேன், என்ன உடை போட்டிருக்கிறேன் என்றெல்லாம் கதை பேசக்கூடாது...!
பிற ஆண்களிடம் பேசும் போது என்ன விஷயமோ அதை மட்டும் பேசிவிட்டு பேச்சை முடித்துக் கொள்ள வேண்டும்....!
அலுவலகத்தில் கூடவே பணிபுரிபவராக இருந்தாலும் நல்லவராகவே இருந்தாலும்..,அலுவல் தவிற வேறு பேச்சு வைத்துக் கொள்வது கூடாது....!
அப்பா அண்ணன் தம்பியைத் தவிற மற்ற ஆண்களை கணவர் இருக்கும் போது மட்டுமே வீட்டில் சந்திக்க வேண்டும். அலுவலக நண்பர்கள், கணவர்களின் நண்பர்கள் என்று யார் வீட்டுக்கு வந்தாலும் கணவர் இருக்கும் போது மட்டுமே வீட்டுக்குள் அனுமதித்து பேச வேண்டும். அவ்வாறு நடந்து கொள்வது பெண்ணுக்கும் பாதுகாப்பு, 'ஜொள் விட நினைக்கும் ஆண்களின் எண்ணத்தையும் அது தடுக்கும்....!'
ஆணுக்கு ஆணும், பெண்ணுக்குப் பெண்ணும் தங்களுக்கென்று கருத்துப் பரிமாற்றத்திற்கு அவர்களுக்குள்ளேயே நல்ல நண்பர்கள் கொண்டிருப்பது எதிர்பாலரிடம் வசப்படுவதை தடுக்கும்....!!!