மயில்களையும் சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்! பாலித ரங்கே பண்டார

#SriLanka #Sri Lanka President #China #Export #Parliament #Lanka4
Mayoorikka
3 years ago
மயில்களையும் சீனாவிற்கு  ஏற்றுமதி செய்ய வேண்டும்! பாலித ரங்கே பண்டார

இலங்கைக்கு சொந்தமான குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பான முன்மொழிவு பற்றிக் கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, குரங்குகளை மட்டுமல்ல முடியுமானால் மயில்களையும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

குரங்குகள் மட்டும் பயிர்களுக்கு சேதம் விளைவிப்பதில்லை, மயில்களும் பயிர்களுக்குப் பாரிய சேதத்தை உண்டாக்குகின்றன என புதுவருட நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது ஊடகப் பிரிவினரால் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

 “குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வனாத்தவில்லுவ ,ஆணைமடு மற்றும் அநுராதபுரத்திற்கு சென்று இந்த மயில்களும் குரங்குகளும் பயிர்களுக்கு ஏற்படுத்தும் அழிவையும் அதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளையும் பார்க்க வேண்டும்.  

அரசாங்கம் ஏதேனும் செய்ய எத்தனிக்கும் போது சில அரசியல் தலைவர்களும் அரச அதிகாரிகளும் பெரும் பிரச்சினைகளை உருவாக்குவார்கள். இப்போது இந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றார்கள்“ என அவர் தெரிவித்தார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4