எரிபொருளின் விலை குறைப்பு: பெற்றோலியக் கூட்டுதாபனம் அறிவிப்பு

#SriLanka #Sri Lanka President #prices #Fuel
Mayoorikka
3 years ago
எரிபொருளின் விலை குறைப்பு: பெற்றோலியக் கூட்டுதாபனம் அறிவிப்பு

நேற்று நள்ளிரவிலிருந்து எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.

 இந்த புதிய விலை திருத்தத்திற்கு அமைவாக பெற்றோல் லீற்றரின் புதிய விலை 333 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

 அதேபோல், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 புதிய விலை திருத்தத்துக்கு அமைய 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 365 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 310 ரூபாவாகும்.

 அதேபோல், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 135 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 465 ரூபாவாக இருந்த சூப்பர் டீசலின் புதிய விலை 330 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும், மண்ணெண்ணெய் விலையில் மாற்றங்கள் எதுவும் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4