பதுளை, கேகாலை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

#SriLanka
Kanimoli
3 years ago
பதுளை, கேகாலை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

பதுளை, கேகாலை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

 பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல மற்றும் பசறை பிரதேச செயலகப் பகுதிகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் கேகாலை பிரதேச செயலகப் பகுதிக்கும், மாத்தறை மாவட்டத்தில் கொட்டோபொல மற்றும் பஸ்கொட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4