யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

#SriLanka #Jaffna #Mullaitivu #University #Mullivaikkal
Mayoorikka
3 years ago
யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இறுதி நாள் அஞ்சலி நிகழ்வுகள் மிக உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்கப்பட்டது.

 யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அஞ்சலி நிகழ்வுகள் இன்று மாலை 2:30 மணியளவில் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தூபியில் இடம்பெற்றது.

 இதன் பொழுது பொதுசுடர் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராமினால் ஏற்றிவைக்கப்பட்டது.

 ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது தொடர்ச்சியாக முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.

 இதன்பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் , பேராசிரியர்கள், கலைப்பீட பீடாதிபதி எஸ் ரகுராம் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

images/content-image/1684406068.jpg

images/content-image/1684406057.jpg

images/content-image/1684406045.jpg

images/content-image/1684406035.jpg

images/content-image/1684406027.jpg

images/content-image/1684406018.jpg

images/content-image/1684406001.jpg

images/content-image/1684405980.jpg

images/content-image/1684405958.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4