ஹெரோயின் போதைப் பொருளுடன் 28 வயதுடைய பெண் கைது

#SriLanka #Arrest #Women #drugs
Prasu
3 years ago
ஹெரோயின் போதைப் பொருளுடன் 28 வயதுடைய பெண் கைது

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் 50 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 28 வயதுடைய பெண்ணொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஏற்கனவே ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு நான்கு மாதங்கள் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ளதோடு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மீண்டும் ஹெரோயின் போதைப் பொருளுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவரும் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு தற்பொழுது சிறைவாசம் அனுபவித்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

 கைது செய்யப்பட்ட பெண் விசாரணையின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக கோப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4