தேன் நீரிழிவிற்கு உகந்ததா? தேனின் மிக முக்கிய பயன்கள் இவை....

#Health #Benefits #Lanka4 #ஆரோக்கியம் #பயன்பாடு #diabetes #லங்கா4
தேன் நீரிழிவிற்கு உகந்ததா? தேனின் மிக முக்கிய பயன்கள் இவை....

மலர்களின் அமுதை கிள்ளி சேர்த்துத்தரும் தேனீயின் செயற்பாட்டால் நமக்கு தேன் கிடைக்கிறது. தேன் மிகவும் சுவையானது. அத்துடன் அது ஆரோக்கியத்தை பொருத்தவகையில் மிகவும் சிறந்ததொன்றாகும்.

இது மருத்துவத் துறையில் 5000 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்துணை அதீத இனிப்புச் சுவை கொண்ட தேன் உண்மையிலேயே உடல் நலத்துக்கு பாது காப்பானதா? இது சம்பந்தமான ஆய்வுகள் ஏதாவது நடத்தப்பட்டி ருக்கின்றனவா? நீரிழிவு உள்ள வர்கள் இதனை பாவிக்கலாமா? என்பது போன்ற பல வினாக்கள் எம்முன்னே எழுகின்றன.

 தேன் என்றால் என்ன? அதில் என்னென்ன பதார்த்தங்கள் அடங்கி இருக்கின்றன என்பதை நாம் முதலில் தெரிந்து வைத் திருக்க வேண்டும். தேனிலே பிரக்ரோஸ், குளுக் கோஸ், மோல்ரோஸ், சுக்கு ரோஸ் எனப்படும் 4 வகையான வெல்லங்கள் காணப்படுகின்றன.

 அத்துடன் இத்தேனிலே புரதத்தின் அடிப்படை அலகுகளான அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன. இவற்றிற்கு மேலதிகமாக தேனிலே பெருமளவு விற்றமின்கள் செறிந்து காணப் படுகின்றன. விற்றமின் B2,B4,B5, B6, B11 விற்றமின் K, விற்றமின் C போலிக்கமிலம் போன்ற பல விற்றமின்கள் ஒன்றாகக் காணப்படுகின்றன.

 இவற்றோடு பல முக்கியமான கனியுப்புக்களையும் இந்தத் தேன் உள்ளடக்கி இருக்கிறது. இரும்பு, நாகம், கல்சியம், பொட்டாசியம், மக்னீசியம், செலேனியம், மங்கனீசு போன்ற பல கனியுப்புக்களின் கலவையாகவும் இது காணப்ப டுகின்றது.

இவை அனைத்தையுமே தேன் உள்ளடக்கி இருப்பதால் இது உலகிலே கிடைக்கக் கூடிய இயற்கையான விற்றமின் ரொனிக்குகளில் முதல் தரமான தாக கணிக்கப்படுகிறது.

 தேனிலே நோய்க் கிருமிகளை கொல்லும் தன்மையும் அவற்றின் பெருக்கத்தை தடுக்கும் தன்மையும் இருப்பது பல ஆய்வுகளின் மூலம் தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

காயங்களுக்கு இதனை பூசி விடும் பொழுது இது தொற்று ஏற்படாமல் தடுக்கும் ஒரு கவசமாகவும் தொற்று ஏற்படுத்தும் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ஒரு மருந்தாகவும் தொழிற்படுவதாக ஆய்வுகள் காட்டி நிற்கின்றன.

 அத்துடன் தேனானது ஒரு அன்ரி ஒக்சிடென்ற் ஆகத் தொழிற்பட்டு உடற் கலங்களைப் பாதுகாக்க உதவுகிறது என்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

 தேன் சம்பந்தமான ஆரம்ப ஆராய்ச்சிகள் குருதியிலே HDL எனப்படும் நல்ல கொலஸ்ரோலை அதிகரிப்பதற்கும் trigliceride எனப்படும் தீய கொழுப்பை குறைப் பதற்கும் தேன் உதவி புரிகின்றது என்பதை காட்டி நிற்கின்றது.

 உடலில் ஏற்படும் அழற்சி பல நோய்களுக்கு வித்திடுகின்றன. தேன் Inflammation என்று சொல்லப்படுகின்ற உடலில் ஏற்ப டும் அழற்சிகளைக் கட்டுப்படுத்து கின்றது.

 இதன் காரணமாக இது நாட்பட்ட வரண்ட இருமலையும் தொண்டை அழற்சியையும் கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டுவரு கிறது. அத்துடன் குடலில் ஏற்படும் அழற்சிகளை குறைத்து வயிற்றோட்டத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. 

ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தேன் கொடுப்பது நல்லதல்ல. நீரிழிவு உள்ளவர்களுக்கு தேன் சிறந்ததா? என்பது சம்பந்தமாக பல் வேறுபட்ட ஆராய்ச்சி முடிவுகள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. நீரிழிவு உள்ளவர்களில் இரத்தத்தின் கொழுப்பை குறைப்பதற்கும் இன்சுலீனின் சுரப்பு வீதத்தை அதிகரிப்பதற்கும் தேன் உதவுகின்றது.

 ஆனால் அதிகளவு தேனை உட்கொண்டால் நீரிழிவு உள்ளவர்களிலே குருதி குளுக்கோஸின் அளவு அதிகரிப்பது அவதானிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த அதிகரிப்பானது அதனை ஒத்த சீனி உட்கொள்ளும் பொழுது ஏற்படும் அதிகரிப்பினும் பார்க்கக் குறைவாக காணப்படுகிறது. 

 எனவே நீரிழிவு உள்ளவர் கள் அதிகளவு தேன் உட்கொள்ளுவது பாதுகாப்பானதா? என்பது பற்றி விரிவான ஆய்வுகள் பல செய்யப்பட வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் தேனானது சீனியிலும் பார்க்க பல மடங்கு பாதுகாப்பானது என்பது தெளிவானது, உறுதியானது. 

 Dr. சி. சிவன்சுதன் 

பொது வைத்திய நிபுணர்