குல தெய்வ அருளால் உங்கள் எண்ணம் நிறைவேறும் கன்னி ராசியினர் - இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
10 months ago
குல தெய்வ அருளால் உங்கள் எண்ணம் நிறைவேறும் கன்னி ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : தடைகளைக் கடந்து நினைத்ததை சாதிப்பீர்கள். வழக்கு உங்களுக்கு சாதகமாகும். பரணி : வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர். புதிய முயற்சியில் அனுகூலம் உண்டாகும். கார்த்திகை 1: குடும்பத்தினர் தேவையறிந்து அதை நிறைவேற்றுவீர். உங்கள் செயலில் முன்னேற்றம் காண்பீர்கள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : பிள்ளைகளால் உங்களுக்குப் பெருமையை உண்டாக்கும். அவர்கள் எதிர்காலம் குறித்து சிந்திப்பீர். ரோகிணி : பழைய செயல் ஒன்றில் லாபம் உண்டாகும். குடும்பத்தாரின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். மிருகசீரிடம் 1,2: மற்றவரின் பலம் பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்பட்டு வெற்றி காணும் நாள்

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்.இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும். திருவாதிரை : உங்கள் விருப்பப்படி செயல்பட்டு நீங்கள் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். லாபமான நாள். புனர்பூசம் 1,2,3 : அலுவலக பணியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும். உங்கள் முயற்சி லாபமாகும்.

கடகம்

புனர்பூசம் 4 : செயலில் கவனம் செல்லும். தொழிலில் இருந்து வந்த தடைகள் விலகும் நாள். பூசம் : சிந்தித்து ஈடுபடும் முயற்சியில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். பயணத்தால் நன்மை அதிகரிக்கும். ஆயில்யம் : நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை சீராகும். 

சிம்மம்

மகம் : அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர். எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும். பூரம் : தொழிலில் உண்டான போட்டியை சரி செய்வீர். உங்கள் முயற்சி ஆதாயத்தை ஏற்படுத்தும். உத்திரம் 1 : ஆரோக்கியம் சீராகும். செயலில் வேகம் உண்டாகும். புதிய இடம் வாங்கும் முயற்சி வெற்றி பெறும். 

கன்னி

உத்திரம் 2,3,4 : பணி புரியும் இடத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அஸ்தம் : முயற்சியில் இருந்த தடை விலகும். குல தெய்வ அருளால் உங்கள் எண்ணம் நிறைவேறும். சித்திரை 1,2 : தொழிலை விரிவு செய்யும் முயற்சி நிறைவேறும். நிதிநிலை உயரும். எதிர்ப்பு விலகும். 

துலாம்

சித்திரை 3,4: திடீர் வரவுகளால் பணத்தேவை பூர்த்தியாகும். நேற்றைய கடன்களை அடைத்து மகிழ்வீர்கள். சுவாதி : உங்கள் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். விசாகம் 1,2,3: நண்பருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு விலகும். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். 

விருச்சிகம்

விசாகம் 4 : இழுபறியாக இருந்த செயல் இன்று நிறைவேறும். வராமல் இருந்த பணம் உங்களைத் தேடி வரும். அனுஷம் : பெரியவர்கள் துணையுடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வழக்கு உங்களுக்கு சாதகமாகும். கேட்டை : நீங்கள் விரும்பியதை இன்று அடைவீர். உங்கள் எண்ணம் எளிதாக நிறைவேறும். எதிர்ப்பு விலகும். 

தனுசு

மூலம் : தொழிலில் உண்டான நஷ்டத்திற்கு தீர்வு காண்பீர். உங்கள் அணுகுமுறை ஆதாயத்தை ஏற்படுத்தும். பூராடம் : வேலைத்தேடி வந்தவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். உத்திராடம் 1 : பணிபுரியும் இடத்தில் ஒரு சிலருக்கு விரும்பிய மாற்றம் உண்டாகும். மதிப்பு அதிகரிக்கும் நாள். 

மகரம்

உத்திராடம் 2,3,4: தடைகளை விலக்கி உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். திருவோணம் : திட்டமிட்டபடி செயல்படுவீர்கள். நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும். அவிட்டம் 1,2: அலுவலகத்தில் உண்டான சங்கடம் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 

கும்பம்

அவிட்டம் 3,4 : இன்று நீங்கள் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும்.குழப்பம் அதிகரிக்கும். சதயம் : உங்களுக்கு சங்கடம் உண்டாகும் வகையில் சில செயல் இன்று நடக்கும். பயணத்தில் கவனம் தேவை. பூரட்டாதி 1,2,3: பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். 

மீனம்

பூரட்டாதி 4 : பிறர் உதவியால் தடைபட்ட முயற்சி இன்று நடந்தேறும். எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள். உத்திரட்டாதி : நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் மனம் மகிழும்படியான சம்பவம் ஒன்று நடைபெறும். ரேவதி : நேற்று இருந்த பிரச்னை விலகும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.