குஜராத்தில் கடலோரப் பகுதிகளிலிருந்து 50 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் இருந்து 'பிபோர்ஜோய்' என்ற புயல் உருவாகியுள்ளது. ஆபத்தை குறிக்கும் வகையில் வங்கதேசம் 'பிபோர்ஜோய்' என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தது. புயல் இப்போது மிகவும் தீவிரமாக உள்ளது. இந்த பிபோர்ஜோய் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் இடையே வரும் 15-ந்தேதி கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையைக் கடக்கும் போது அதன் வேகம் மணிக்கு 125 முதல் 135 கிமீ வேகத்தில், அதிகபட்சமாக 150 கிமீ தூரம் வரை நகர்ந்து வருகிறது. காற்றின் வேகம் இந்த அளவு வரை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கூடுதலாக, குஜராத்தின் போர்பந்தர், ராஜ்கோட் மற்றும் மோர்பி போன்ற பல்வேறு பகுதிகளில் நாளை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிபோர்ஜோய் புயல் காரணமாக குஜராத்தில் மீனவர்கள் வரும் 16ம் தேதி வரை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும், குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் சுமார் 50,000 ஆயிரம் நபர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.