இலண்டனில் கல்லூரி மாணவி படுகொலை; இருவர் கைது!

PriyaRam
3 years ago
இலண்டனில் கல்லூரி மாணவி படுகொலை; இருவர் கைது!

இந்தியா - ஹைதராபாத்தை சேர்ந்த கல்லூரி மாணவி கோந்தம் தேஜஸ்வினி என்பவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கொல்லப்பட்டார்.

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த கோந்தம் தேஜஸ்வினி என்பவர் பட்ட மேற்படிப்பு படிப்பதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் லண்டன் சென்றுள்ளார். 27 வயதாகும் இவர், லண்டனில் வெம்ப்ளி பகுதியில் நீல்ட் கிரசெண்ட் என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வேறு ஒரு பெண்ணுடன் சேர்ந்து தங்கி இருந்துள்ளார்.

இந்நிலையில், அதே குடியிருப்பில் வசித்து வந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த 24 வயது இளைஞர், கோந்தம் தேஜஸ்வினியையும், மற்றொரு பெண்ணையும் கத்தியால் குத்தியுள்ளார். இதில், தேஜஸ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கத்திக்குத்தில் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தியால் குத்திய இளைஞரை பொலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்தக் கொலை வழக்கில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 23 வயது இளைஞர் ஒருவரையும் லண்டன் மெட்ரோபாலிடன் பொலீசார் கைது செய்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4