அமைச்சர் செந்தில் பாலாஜி கைது; மனித உரிமைகள் ஆணையக உறுப்பினர் கண்ணதாசன் விசாரணை!

PriyaRam
1 year ago
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது; மனித உரிமைகள் ஆணையக உறுப்பினர்  கண்ணதாசன் விசாரணை!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

சிறைத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அவரை குடும்பத்தினர் மட்டும் சந்திக்க அனுமதியளிக்கப்படுகிறது. கட்சியினரோ, திமுக அமைச்சர்களோ சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. 

இன்று அமைச்சர் சேகர் பாபு மருத்துவமனை சென்ற போதுகூட பார்ப்பதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. எனவே செந்தில் பாலாஜியின் குடும்பத்தினரை மட்டும் சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். 

iஅமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் மனித உரிமை மீறல் நடந்ததாக முறைப்பாடுகள் எழுந்தன. இந்நிலையில் மனித உரிமைகள் ஆணையக உறுப்பினர் கண்ணதாசன் ஓமந்தூரார் மருத்துவமனை சென்று, செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தினார். அதன் பின்னர் கண்ணதாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

 “அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினோம். அமைச்சர் செந்தில் பாலாஜி மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். தன்னை கைது செய்யும் போது கடுமையாக நடந்து கொண்டதாக அவர் தெரிவித்தார். தரையில் தள்ளியதால் தலையில் காயம் ஏற்பட்டதுடன், நெஞ்சு வலி இருப்பதால் அதிகம் பேச முடியவில்லை என்றும் அவர் கூறியதாக மனித உரிமைகள் ஆணையக உறுப்பினர் கண்ணதாசன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!