பிபார்ஜோய் புயலை சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வீடியோ வீரர்!
சர்வதேச விண்வெளி நிலையத்தின் விண்வெளி வீரர் ஒருவர் இன்று குஜராத் மாநிலத்தில் பிபார்ஜோய் புயல் எவ்வாறு கரையை கடக்கிறது என்பதை விண்வெளியில் இருந்து வீடியோ எடுத்துள்ளார்.
இந்த சூறாவளியை ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி வீடியோவில் படம் பிடித்தார்.
இதை அவர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். குஜராத் கடற்கரையிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிபர்ஜோய் புயல், ஜகாவ் துறைமுகத்திற்கு அருகில் உள்ள மாண்ட்வி மற்றும் கராச்சி வழியாக செல்லும் என்றும், மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கரையோரப் பகுதிகளில் இருந்து 74,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த புயலின் வேகம் மணிக்கு 120-130 கிமீ வேகத்தில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன, இது வகை 3 "மிகவும் கடுமையான சூறாவளி" என வகைப்படுத்தப்பட்டுள்ளது.