உயா்தர மேலதிக வகுப்புக்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை: உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்

#SriLanka
PriyaRam
3 years ago
உயா்தர மேலதிக வகுப்புக்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை: உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்

உயா்தர மேலதிக வகுப்புக்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தொிவித்துள்ளாா்.

உயர்தர வகுப்புகளில் அறவிடப்படும் கட்டணம் மற்றும் உயர்தர வகுப்புகளில் வௌியிடப்படும் விடயங்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒழுங்குமுறையை மேற்கொள்ள எதிா்பாா்ப்பதாக அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 இதேவேளை, இவ்வருட உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவா்கள்- எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படுவார்கள் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளாா்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4