பொலிஸ் உத்தியோகத்தரை துப்பாக்கியால் சுடச் சென்ற சார்ஜன்ட்

#SriLanka #Colombo #Police #sri lanka tamil news
Prathees
3 years ago
பொலிஸ் உத்தியோகத்தரை துப்பாக்கியால் சுடச் சென்ற சார்ஜன்ட்

மாலபேயில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரை பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து சார்ஜன்ட் ஒருவர் துப்பாக்கியால் சுட முயற்சித்துள்ளார். 

 இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 பின்னர் மற்ற பொலிசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

 பின்னர் குறித்த சார்ஜன்ட் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றதாகவும், அவரை கைது செய்ய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 சம்பந்தப்பட்ட சார்ஜன்டை பணி இடைநிறுத்தம் செய்வதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4