இன்று பல மாவட்டங்களில் மழையுடன் கூடிய காலநிலை தொடரும்

#SriLanka #weather #Rain #Lanka4
Kanimoli
3 years ago
இன்று பல மாவட்டங்களில்  மழையுடன் கூடிய காலநிலை தொடரும்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் எனவும் குறித்த அறிவித்துள்ளது.

 ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், 

புத்தளம், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றானது கி.மீ. 40-45 வரை காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4