வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் ஓரளவு மழை பெய்யக்கூடும்

#SriLanka #weather #Rain #Lanka4
Kanimoli
3 years ago
வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் ஓரளவு மழை பெய்யக்கூடும்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று மழையுடன் கூடிய நிலவும் எனவும் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் ஓரளவு மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

 மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மாகாணத்திலும் புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றானது கி.மீ. 40-45 வரை பலத்த காற்று வீசும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4