ஜனாதிபதி தமிழ் கட்சிகளுடன் ஆரம்பித்துள்ள உரையாடல் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கருத்து

#SriLanka #UN
Mayoorikka
3 years ago
ஜனாதிபதி  தமிழ்  கட்சிகளுடன் ஆரம்பித்துள்ள உரையாடல் தொடர்பில் ஐ.நா  மனித உரிமைகள் பேரவை கருத்து

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் அரசியல் கட்சிகளுடன் ஆரம்பித்துள்ள உரையாடலை நாங்கள் ஊக்குவிக்கிறோம் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.

 அத்துடன், தொல்பொருள், வனவியல் அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக நிலங்களை கையகப்படுத்துவதை நிறுத்துவதாக ஜனாதிபதி அளித்த வாக்குறுதியை வரவேற்கிறோம் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் நாடா யூசுப் ஏ. அல் நஷிப் தெரிவித்துள்ளார்.

 53 ஆவது வழமையான அமர்வின் 6 வது கூட்டம்   இடம்பெற்ற போது, இலங்கை தொடர்பான வாய்மொழி மூல புதுப்பிக்கப்பட்ட அறிக்கை முன்வைக்கப்பட்டது.

 சாத்தியமான சீர்திருத்தங்களின் சுமை மேலும் ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவது இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என்றும் பிரதி உயர்ஸ்தானிகர் நாடா யூசுப் ஏ. அல் நஷிப் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4