மஸ்கெலியா வீதி மூடப்பட்டுள்ளதால் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்த வேண்டுகோள்

#SriLanka #weather #Road #Lanka4
Kanimoli
2 years ago
மஸ்கெலியா வீதி மூடப்பட்டுள்ளதால் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்த வேண்டுகோள்

நோட்டன்பிரிட்ஜ் – மஸ்கெலியா வீதி மூடப்பட்டுள்ளதால் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

 நோர்டன்பிரிட்ஜ் – மஸ்கெலியாவில்ல் இன்று (27) பெய்த கடும் மழை காரணமாக தியகல தப்லோவத்த பகுதியில் இருந்து பாறை ஒன்றும் மண்மேடு ஒன்றும் சரிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து நோட்டன்பிரிட்ஜ் – மஸ்கெலியா வீதியை மூட பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

 வீதி புனரமைக்கப்படும் வரை, ஹட்டனில் இருந்து நோட்டன்பிரிட்ஜ் நோக்கி பயணிக்கும் வாகனங்கள் ஹட்டனில் இருந்து காசல்ரீ, ஒஸ்போர்ன் ஊடாக வந்து நோட்டன்பிரிட்ஜ் ஊடாக செல்ல முடியும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4