இரண்டு வருடங்களாக மருந்து கொடுத்து வந்த போலி வைத்தியர்

#SriLanka #doctor
Prathees
2 years ago
இரண்டு வருடங்களாக மருந்து கொடுத்து வந்த போலி வைத்தியர்

பதிவு செய்யப்பட்ட வைத்தியர் போல் நடித்து இரண்டு வருடங்களாக நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்த நபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

 உஸ்வதகேயாவ பிரதேசத்தில் சட்டவிரோதமாக மருத்துவ சிகிச்சை நிலையம் நடத்தி நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த இவர் இரண்டு பெயர்களில் தோன்றியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

 கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 சந்தேகநபர் வசம் இருந்த போலி முத்திரைகள், லெட்டர்ஹெட்கள் உள்ளிட்ட பல போலி ஆவணங்களை பொலிசார் கைது செய்துள்ளனர். 

 சந்தேகநபர் கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், அவர் வைத்தியராகும் தகுதியற்றவர் எனவும் இதற்கு முன்னர் வைத்தியர் ஒருவரின் கீழ் பணிபுரிந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4