நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கும் பாராளுமன்ற விசேட குழு நியமிப்பு

#SriLanka #Parliament #drugs #Lanka4
Kanimoli
2 years ago
நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கும் பாராளுமன்ற விசேட குழு நியமிப்பு

நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் பாராளுமன்ற விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

 நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் கடமையாற்றுவதற்காக டிரான் அலஸ் தலைமையில் பின்வரும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (01) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

 அதற்கமைய, சட்டத்தரணி சிசிர ஜயகொடி, (வைத்திய கலாநிதி) சீதா அரம்பேபொல, புத்திக பத்திறண, (வைத்திய கலாநிதி) கயாஷான் நவனந்த, துஷார இந்துனில் அமரசேன, (வைத்திய கலாநிதி) உபுல் கலப்பத்தி, (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய, அசங்க நவரத்ன, உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, தவராஜா கலை அரசன் மற்றும் மஞ்சுலா திசாநாயக ஆகியோர் இந்தக் குழுவில் கடமையாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4