திருகோணமலையில் துப்பாக்கிச்சூடு : இருவர் காயம்!

#SriLanka #Trincomalee #Lanka4
Thamilini
2 years ago
திருகோணமலையில் துப்பாக்கிச்சூடு : இருவர் காயம்!

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இளைஞர்கள் இருவர் காயமடைந்துள்ளனர். 

குறித்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. 

இதில் காயமடைந்த இளைஞர்கள் இருவரும்தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

குச்சவெளி- வடலிக்குளம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஏ.அஸ்மி மற்றும் 21 வயதுடைய அஸ்கான் ஆகிய இருவரே துப்பாக்கிபிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4