மன்னார்-இசைமாளத்தாழ்வில் வான் விபத்து : முன்னாள் அருட்தந்தை உட்பட மூவர் காயம்

#SriLanka #Mannar #Accident #Lanka4 #இலங்கை #விபத்து #லங்கா4
மன்னார்-இசைமாளத்தாழ்வில் வான் விபத்து : முன்னாள் அருட்தந்தை உட்பட மூவர் காயம்

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார்-மதவாச்சி பிரதான வீதியில் ஹயஸ் வாகமொன்று மின் கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மன்னார் மறைமாவட்டத்தின் முன்னால் குரு முதல்வரும் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஆணைக்குழு இயக்குனருமான அருட் தந்தை அன்ரனி விக்டர் சூசை அடிகள் உள்ளடங்களாக வானில் பயணித்த மூவர் காயமடைந்துள்ளனர்.

 மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி நிறைவடைந்த நிலையில் நேற்று மாலை அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய மூவரும் மடு திருத்தலத்தில் இருந்து மன்னார் நோக்கி ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்துள்ளனர்.

 இதன் போது அவர் பயணித்த வாகனம் - மதவாச்சி மன்னார் பிரதான வீதி, இசைமாளத்தாழ்வு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியின் அருகில் உள்ள மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 

 இதன் போது காயமடைந்த அருட்தந்தை அன்ரனி விக்டர் சூசை அடிகளார் உள்ளடங்களாக மூவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் வண்டி மூலம் முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அருட்தந்தை அன்ரனி விக்டர் சூசை அடிகளார் உள்ளடங்களாக மூவரும் ஏற்பட்ட சிறு காயங்களுக்காக வைத்தியாசாலையில்சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4