வட மாகாணத்தில் வைத்தியசாலை வெற்றிடங்கள் 2000 காணப்படுகிறது

#SriLanka #NorthernProvince #Hospital #Job Vacancy #Lanka4 #இலங்கை #லங்கா4
வட மாகாணத்தில் வைத்தியசாலை வெற்றிடங்கள் 2000 காணப்படுகிறது

வட மாகாணத்தில் மொத்தமாக வைத்தியசாலைகளில் உள்ள ஆளணி 8000 பேராக அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது அங்கு 2000 பேருக்கான ஆளணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

 வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

 வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ஆளணி பற்றாக் குறை காணப்படுகின்றது. அதில் குறிப்பாக ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சுகாதார உதவியாளர்களாக காணப்படுகின்றார்கள்.

 அதேபோல தாதியர்கள் மருத்துவ மாதுக்கள் என பல்வேறுபட்ட நிலைகளிலும் ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது. 

தற்போதைய நிலையில் புதிதாக எவரையும் உள்வாங்குவதற்கு தாமதம் காணப்படுகின்ற படியினால் எதிர்வரும் காலங்களில் சுகாதார அமைச்சின் ஊடாக இந்த நியமனங்கள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4