பாணந்துறையில் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி பலி

#SriLanka #Death #Arrest #Police #Lanka4 #GunShoot
Kanimoli
2 years ago
பாணந்துறையில் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி பலி

பாணந்துறை திக்கல சந்தியில் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளதுடன், தாக்குதலுக்கு உள்ளான நபர் பாணந்துறை தெற்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

 பாணந்துறை தொட்டவத்தை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் உயிரிழந்தவருக்கும், சந்தேக நபருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, இறந்தவர் சந்தேகநபரை முச்சக்கரவண்டியின் கைப்பிடியால் தாக்கியுள்ளார்.

 இதன்போது சந்தேகநபர் பதிலுக்கு தாக்கியதை அடுத்து படுகாயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தாக்குதல் நடத்திய பாணந்துறை, வாழைத்தோட்டம் பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4