வத்தளையில் இருக்குழுக்களுக்கு இடையில் மோதல்!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
வத்தளையில் இருக்குழுக்களுக்கு இடையில் மோதல்!

வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெரவலபிட்டிய பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று (25.07) மாலை இடம்பெற்றுள்ளது. 

இரு குழுக்களுக்கிடையில் வாக்குவாதம் முற்றி, கூரிய ஆயுதத்தால் ஒருவர் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றார்.  

மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே காயமடைந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4