மராட்டியத்தில் வேன் மீது லாரி மோதியதில் போலீஸ் அதிகாரி உட்பட இருவர் உயிரிழப்பு

#India #Death #Accident #Tamilnews #Breakingnews #Died
Mani
2 years ago
மராட்டியத்தில் வேன் மீது லாரி மோதியதில் போலீஸ் அதிகாரி உட்பட இருவர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலம் யவத்மாலில் உள்ள நாக்பூர் - துல்ஜாபூர் நெடுஞ்சாலையில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனை நடத்தி வந்தனர். இதையடுத்து அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்தனர். சோதனையின் போது, ​​போலீஸ் வேனும் மற்றொரு லாரியும் எதிர்பாராத விதமாக மோதியது.

இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே போலீஸ் அதிகாரி மற்றும் விபத்தை ஏற்படுத்திய லாரியின் டிரைவர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு போலீஸ் அதிகாரிகள் பலத்த காயம் அடைந்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டனர். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பலத்த காயம் அடைந்த இரண்டு போலீஸ் அதிகாரிகள் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது, ​​விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4