ஒரு இஸ்லாமியர் எத்தனை திருமணம் செய்யலாம்? உண்மை ஆதாரத்துடன்.

#spiritual #Marraige #Time #Muslim #Lanka4 #ஆன்மீகம் #திருமணம் #லங்கா4 #முறை
Mugunthan Mugunthan
9 months ago
ஒரு இஸ்லாமியர் எத்தனை திருமணம் செய்யலாம்? உண்மை ஆதாரத்துடன்.

இஸ்லாமிய மார்க்கத்தில் ஒருவர் எத்தனை திருமணம் செய்யலாம் என்பது பொதுவான ஒரு கேள்வியாக காணப்படுகிறது. ஒவ்வொரு சமுதாயத்திலும் வாழ்ந்த நபிமார்கள் நிறைய திருமணம் செய்துள்ளார்கள்.

இதற்கு இஸ்லாமிய புராணங்களில் வரும் பெரியோர்களின் அதாவது நபிகளின் வாழ்க்கையை நோக்கினால் உதாரணமாக நபி இப்ராகிம் அலி இஸ்லாம் அவர்கள் 2 திருமணமும், நபி யாக்கூப் இஸ்லாம் அவர்கள் 4 திருமணமும் நபி மூஸா அலி இஸ்லாம் அவர்கள் 2 திருமணமும் நபி தாவுத் அலி இஸ்லாம் அவர்கள் 8 திருமணமும் நபி சுலைமான் அலி இஸ்லாம் அவர்கள் 99 திருமணமும் ஈருலகத்திற்கும் தலைவாரான நமது முஹம்மது நபி இஸ்லாம் அவர்கள் 12 திருமணமும் செய்துள்ளார்கள்.

 ஆனால் ஒரு சாதாரண மனிதனால் இத்தனை திருமணம் செய்யலாமா? என்ற கேள்வி மறு புறம் எழ.... அது முடியாது என இஸ்லாமிய மார்க்கம் தெரிவிக்கிறது.

 பொதுவாக இஸ்லாமியர் ஒருவர செய்து கொள்ளக்கூடிய திருமணம் 4 ஆகும். நபிகள் அவர்கள் ஆட்சிக்காக தீனுக்காக வேறு நன்மைக்காகவே இத்தனை பெண்களை திருமணம் செய்தனர். ஒரு பொதுவான இஸ்லாமியன் அதிகூடிய தொகையான 4 திருமணங்களை செய்தால் அவன் அத்தனை மனைவியையும் சரிசமனாக பார்க்க வேண்டும். ஆகாது என்றால் ஒரு திருமணமே அவனுக்கு போதுமானது என இஸ்லாம் கூறுகின்றது.