ஆசிய கோப்பை தொடர்; இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 4 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய பணிந்தார்.
அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் குவித்தது. 3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியும், லோகேஷ் ராகுலும் கைகோர்த்து விளையாடிய போது மழை குறுக்கிட்டது. அப்போது இந்தியா 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 8 ரன்னுடனும், லோகேஷ் ராகுல் 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த ஆட்டத்திற்கு மாற்று நாள் (ரிசர்வ்) ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருப்பதால், இதன்படி பாதியில் நின்று போன இந்த ஆட்டம் மாற்று நாளான இன்று தொடர்ந்து நடைபெற உள்ளது.
இந்நிலையில் இன்று தொடங்க கூடிய ஆட்டம் மழை காரணமாக தாமதாகி உள்ளது. அவுட் பீல்ட் ஈரப்பதமாக இருப்பதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.