பிரித்தானிய புதிய உயர்ஸ்தானிகரை சந்தித்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச!

#SriLanka #Sri Lanka President #Sajith Premadasa #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
1 year ago
பிரித்தானிய புதிய உயர்ஸ்தானிகரை சந்தித்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் பிரித்தானிய புதிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக் இற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 நேற்று (14) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

 இலங்கைக்கான புதிய பிரித்தானிய உயர்ஸ்தானிகராகப் பதவியேற்றதன் பின்னர் இடம்பெற்ற இந்த விசேட சந்திப்பில், நாட்டில் நிலவும் சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் இருதரப்பினர் இடையே கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

 தற்போதைய அரசாங்கம் குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை மீறி தேர்தல்களை குறித்த நேரத்தில் நடத்தாமை மற்றும் தேர்தல்கள் தொடர்ந்தும் பிற்போடப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் பிரித்தானிய புதிய உயர்ஸ்தானிகருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

 இந்நிகழ்வில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் டேனியல் ஷெரியும் கலந்து கொண்டிருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!