நியூயோர்க் சென்றடைந்தார் ஜனாதிபதி ரணில்!
கியூபாவில் நடைபெற்ற 'ஜி77 மற்றும் சீனா' உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சென்றடைந்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78வது அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி நியூயோர்க்கை சென்றடைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 'G77 மற்றும் சீனா' அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் நேற்று (15.09) கலந்துகொண்டு உரையாற்றினார்,
இதன்போது விஞ்ஞானம், தொழிநுட்பம் மற்றும் புத்தாக்கத் துறையானது உலகளாவிய அபிவிருத்தி சவால்களை எதிர்கொள்வதில் முக்கிய பங்காற்ற முடியும் என தெரிவித்தார்.
அவரது கியூபா விஜயத்தின் போது, ஜனாதிபதி மற்றும் கியூபா ஜனாதிபதி மிகுவல் டீஸ் கேனல் பெர்முடெஸ் ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடலும் இடம்பெற்றது. இதன்போது பல்வேறு ஒப்பந்தங்களும் எட்டப்பட்டன.